சினிமா செய்திகள்

யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை + "||" + Sarrainodu: Allu Arjun’s 2016 Actioner Makes A First Kind Of A Record On YouTube India!

யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை

யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை
இந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்

 சென்னை

அல்லு அர்ஜுன் நடித்த ‘சரைநோடு’ திரைப்படம் யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்றுள்ளது.போயபதி சீனு இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சரைநோடு’. அல்லு அர்ஜுன், ரகுல் ப்ரீத் சிங், கேதரின் தெரசா, உள்ளிட்டோர் நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமன் இசையமைத்திருந்த இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இப்படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 2017ஆம் ஆண்டு யூ-டியூபில் வெளியிடப்பட்டது. வெளியானது முதல் இன்று வரை இப்படத்தை 30 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. யூ-டியூபில் முதல்முறையாக 30 கோடி முறை பார்க்கப்பட்ட முதல் இந்தியப் படம் இதுவாகும்.

இதனை கொண்டாடும் வகையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் #Sarrainodu300MillionViews என்ற ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ என்ற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். இதில் அவருடன், ராஷ்மிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. விஜயின் மாஸ்டர் திரைப்படம் எப்படி இருக்கிறது...?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவா கார்த்திகேயன் சென்னை வெற்றி திரையரங்கில் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.
2. விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா டீசர் வெளியீடு
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
3. லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறிய நடிகை பிரியங்கா சோப்ரா போலீசார் எச்சரிக்கை
பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா லண்டனில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதால் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
4. திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி விதி மீறல் - தமிழக அரசுக்கு மத்திய அரசு எதிர்ப்பு
திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதித்திருப்பது விதி மீறல்என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
5. புத்தகங்கள் மட்டுமே ஒருவரை படித்தவராக நிர்ணயித்திருந்தால், நமக்கு காமராஜர் கிடைத்திருக்க மாட்டார் - நடிகை குஷ்பு
புத்தகங்கள் மட்டுமே ஒருவரை படித்தவராக நிர்ணயித்திருந்தால், நமக்கு காமராஜர் கிடைத்திருக்க மாட்டார் என நடிகை குஷ்பு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.