விமல்-பிரபு-ஆனந்தியுடன் பொங்கல் வெளியீடாக, ‘மன்னர் வகையறா’


விமல்-பிரபு-ஆனந்தியுடன் பொங்கல் வெளியீடாக, ‘மன்னர் வகையறா’
x
தினத்தந்தி 10 Nov 2017 10:42 AM GMT (Updated: 10 Nov 2017 10:42 AM GMT)

விமல் நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘மன்னர் வகையறா.’ இந்த படத்தை விமலின் சொந்த பட நிறுவனம் தயாரித்துள்ளது.

விமல் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஜெயப்பிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். விமல் ஜோடியாக ‘கயல்’ பட நாயகி ஆனந்தி நடித்துள்ளார். பூபதி பாண்டியன் டைரக்டு செய்து இருக்கிறார்.

படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடைபெறுகின்றன. வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த படம் தனக்கு ஒரு திருப்பமாக அமையும் என்று விமல் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Next Story