தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு!


தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு!
x
தினத்தந்தி 8 March 2018 10:30 PM GMT (Updated: 8 March 2018 9:45 AM GMT)

இசை ஞானம் உள்ள டைரக்டர்களில், விஜய்யும் ஒருவர்.

டைரக்டர் விஜய் படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பேசப்படும் வகையில் இருக்கும். அவர் இயக்கி அடுத்து வெளிவர இருக்கும் ‘கரு’ படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்து இருக்கிறார். விஜய்-சாம் சி.எஸ்-கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம், ‘கரு.’

இதுகுறித்து டைரக்டர் விஜய் கூறுகையில், “சமீபகால தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு, சாம் சி.எஸ். கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்து கொண்டு இசையமைப்பதில், சாம் சி.எஸ். கெட்டி. மிக சிறந்த பாடல்களை கொண்ட என் படங்களின் பட்டியலில், ‘கரு’வும் ஒன்றாக இருக்கும்” என்றார்! 

Next Story