இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படம்!


இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படம்!
x
தினத்தந்தி 20 Sep 2018 11:30 PM GMT (Updated: 20 Sep 2018 9:13 AM GMT)

ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படம் ரூ.600 கோடியில் தயாராகி இருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் டைரக்‌ஷனில் உருவாகி யிருக்கும் ‘2.0’ படம், ஏறக் குறைய ரூ.600 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. இந்திய சினிமாவில், மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி யிருக்கும் படம் இதுதான் என்கிறார், டைரக்டர் ஷங்கர்.

‘2.0’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகி இருக்கிறது. ஆங்கிலத்திலும், சைனீசிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. சண்டை காட்சிகள், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில், படுபயங்கரமாக படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில், 4 பாடல்கள் இடம் பெறுவதாகவும் அவர் கூறினார்!

Next Story