சினிமா துளிகள்

‘உயர்ந்த மனிதன்’ எப்போது தொடங்கும்? + "||" + When will the 'Uyarndha Manithan' begin?

‘உயர்ந்த மனிதன்’ எப்போது தொடங்கும்?

‘உயர்ந்த மனிதன்’ எப்போது தொடங்கும்?
டைரக்டர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர், எஸ்.ஜே.சூர்யா.
கடந்த ஆண்டு, ‘ஸ்பைடர்,’ ‘மெர்சல்’ படங்களில் வில்லனாக நடித்தார். அடுத்து இவர் நடித்து, ‘இறவாக்காலம்,’ ‘நெஞ்சம் மறப்பதில்லை’ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன.

இதையடுத்து இவர் அமிதாப்பச்சனுடன், ‘உயர்ந்த மனிதன்’படத்தில் இணைந்து நடித்து கலக்க இருக்கிறார். இந்த படத்தை ‘கள்வனின் காதலி’ புகழ் தமிழ்வாணன் டைரக்டு செய்கிறார்.

தமிழ், இந்தி ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது!