60-வது படத்தில், அழகான அஜித்!


60-வது படத்தில், அழகான அஜித்!
x
தினத்தந்தி 6 Oct 2019 12:00 AM GMT (Updated: 5 Oct 2019 11:59 AM GMT)

அஜித் நடித்து இந்த வருடம் வெளியான ‘விஸ்வாசம்,’ ‘நேர்கொண்ட பார்வை’ ஆகிய 2 படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. அதைத்தொடர்ந்து அவர் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.

 ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அவர் தாடியும், மீசையுமாக வயதான தோற்றத்தில் நடித்து இருந்தார்.

அதற்கு நேர்மாறாக புதிய படத்தில் அஜித் இளைஞராக மிக அழகான தோற்றத்தில் வரயிருக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத், அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்தையும் இயக்குகிறார். இந்த படத்தை பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவ்வப்போது கற்பனையான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அந்த தகவல்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அஜித், அழகான தோற்றத்துக்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறார். இதை வைத்து அவர், 60-வது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இதுபற்றி கருத்து எதுவும் சொல்லாமல், டைரக்டர் வினோத் சிரிக்கிறார்!

Next Story