படமாகும் குறுநாவலில், சூர்யா!


படமாகும் குறுநாவலில், சூர்யா!
x
தினத்தந்தி 18 Jan 2020 11:45 PM GMT (Updated: 18 Jan 2020 8:22 PM GMT)

சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து சூர்யா நடிக்கப்போகும் படம் எது, அந்த படத்தை இயக்கப் போகிறவர் யார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது.

‘சூரரை போற்று’ படத்தை அடுத்து சூர்யா, வெற்றிமாறன் டைரக்‌ஷனில் நடிப்பது உறுதியாகி விட்டது. இருவரும் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது. படத்துக்கு, ‘வாடிவாசல்’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

‘வாடிவாசல்’ என்ற பெயரில், சி.எஸ்.செல்லப்பா எழுதிய குறுநாவலே அதே பெயரில் படமாகிறது. ஜல்லிக்கட்டை கருவாக வைத்து அந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த படத்தில், மாடு பிடிக்கும் காட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Next Story