சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!


சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்!
x
தினத்தந்தி 9 Feb 2020 3:00 AM GMT (Updated: 8 Feb 2020 12:57 PM GMT)

சிம்பு கதாநாயகனாக நடிக்க, வெங்கட் பிரபு இயக்க இருக்கும் ‘மாநாடு’ படம், சில பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது.

நீண்ட தாமதத்துக்குப்பின், இம்மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சிம்பு, ‘அப்துல் காலிக்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘‘இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன். அப்படி ஒரு சிறப்பான வேடம். எல்லா கதாநாயகர்களுக்கும் இதுபோன்ற அபூர்வமான கதாபாத்திரம் அமையாது’’ என்று சிம்பு கூறுகிறார். ‘‘சிம்புவின் பாராட்டு என்னை நெகிழவைத்தது’’ என்று டைரக்டர் வெங்கட் பிரபு சொல்கிறார்.

இந்த பாராட்டுகளை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்!

Next Story