கொரோனாவுக்கு பிரபல வங்க மொழி சின்னத்திரை இயக்குனர் பலி


வங்க மொழி சின்னத்திரை இயக்குனர் தேபிதாஸ் பட்டாச்சார்யா
x
வங்க மொழி சின்னத்திரை இயக்குனர் தேபிதாஸ் பட்டாச்சார்யா
தினத்தந்தி 28 Dec 2020 8:00 PM GMT (Updated: 28 Dec 2020 6:24 PM GMT)

பிரபல வங்க மொழி சின்னத்திரை இயக்குனர் தேபிதாஸ் பட்டாச்சார்யா. இவர் பல வெற்றி பெற்ற தொலைக்காட்சி தொடர்களை டைரக்டு செய்துள்ளார்.

தற்போது பிரித்தாஷ்ரம் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அடுத்த சீசனை இயக்கி வந்தார். இந்த நிலையில் அவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தேபிதாஸ் பட்டாச்சார்யா சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே பிரபல பின்னணி பாடகர்கள் ஏ.எல்.ராகவன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், குணசித்திர நடிகர் புளோரண்ட் பெரேரா, தயாரிப்பாளர் சுவாமி நாதன், இந்தி டி.வி. நடிகை திவ்யா பட்நாகர், கன்னட நடிகர் ஹூலிவானா கங்காதர் உள்ளிட்டோர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர்.

Next Story