சினிமா துளிகள்

3 தலைமுறை நடிகர்கள் மகன், பேரனுடன் நடிக்கும் விஜயகுமார் + "||" + 3 generations of actors Son, acting with grandson Vijayakumar

3 தலைமுறை நடிகர்கள் மகன், பேரனுடன் நடிக்கும் விஜயகுமார்

3 தலைமுறை நடிகர்கள் மகன், பேரனுடன் நடிக்கும் விஜயகுமார்
தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக இருக்கும் விஜயகுமார் 1970-களில் இருந்து நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் கதாநாயகனாக வந்த அவர் பின்னர் குணசித்திர நடிகராக மாறினார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவரது மகன் அருண் விஜய் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அருண் விஜய்யின் குற்றம் 23 படம் பெரிய வெற்றி பெற்றது. அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக வந்தார். தற்போது அக்னி சிறகுகள், பாக்ஸர், சினம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கும் புதிய படத்தில் விஜயகுமார், அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மகன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள். மூன்று தலைமுறை நடிகர்கள் ஒரே படத்தில் நடிப்பது அரிதான விஷயம். மகன், பேரனுடன் விஜயகுமார் இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. தந்தை வழியில் மகன்
மறைந்த நடிகர் ஜெய்சங்கர், நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர்.
2. அமெரிக்காவில் ஜோ பைடன் மகன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை
அமெரிக்காவில் ஜோ பைடனின் மகன் வரி விவகாரங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

அதிகம் வாசிக்கப்பட்டவை