சினிமா துளிகள்

பிரபல நடிகை 2-வது திருமணம் + "||" + Famous actress 2nd marriage

பிரபல நடிகை 2-வது திருமணம்

பிரபல நடிகை 2-வது திருமணம்
தமிழில் என் சுவாச காற்றே படத்தில் நடித்தவர் தியா மிர்சா. இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடித்து 2001-ல் திரைக்கு வந்த மின்னலே படத்தை கவுதம் மேனனே இந்தியில் ரீமேக் செய்தபோது அதில் தியா மிர்சா கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் வைல்டு டாக் என்ற படத்தில் நடித்து வருகிறார். தியா மிர்சா முதலில் ஷாகில் சங்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். தற்போது 40 வயதாகும் தியா மிர்சா மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் வைபவ் ரேஹி என்பவரை காதலித்தார். இந்த நிலையில் வைபவ் ரேஹியை தியா மிர்சா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. கொரோனா விதிமுறைகளால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நடிகைக்கு கொரோனா அறிகுறி
பிரபல தெலுங்கு நடிகை அனுசுயா பரத்வாஜ்-க்கு கொரோனா அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.