முத்த காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கிய கதாநாயகன்


முத்த காட்சியில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கிய கதாநாயகன்
x
தினத்தந்தி 21 Feb 2021 6:05 PM GMT (Updated: 21 Feb 2021 6:05 PM GMT)

பட அதிபரான ஆர்.கே.சுரேசை, ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வில்லனாக டைரக்டர் பாலா அறிமுகம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆர்.கே.சுரேஷ் பல படங்களில் வில்லனாக நடித்தார். விரைவில் திரைக்கு வரயிருக்கும் ‘வேட்டை நாய்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

படத்தில் அவரும், கதாநாயகி சுபிக்சாவும் உதட்டுடன் உதடு சேர்த்து நடித்த ஒரு முத்த காட்சி இடம்பெறுகிறது. அதில் நடித்தது பற்றி ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது:-

‘‘புதிய பாதையில் பார்த்திபன் வந்ததுபோல், இந்த படத்தில் என் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருக்கிறது. ‘வேட்டை நாய்’ என்று பைரவரின் பெயரை டைட்டிலாக வைத்தபோது, ஒரு அதிர்வு ஏற்பட்டது. படத்தில் உதட்டுடன் உதடு சேர்த்த முத்த காட்சி இருக்கிறது. அதில் நடிப்பதற்கு முன், என் மனைவியிடம் அனுமதி கேட்டேன். இனிமேல் அதுபோன்ற காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே என் மனைவியிடம் அனுமதி வாங்கி விடுவேன்.’’

இவ்வாறு ஆர்.கே.சுரேஷ் கூறினார்.

Next Story