ரீஎன்ட்ரியாகும் மோகன்- படத்தின் பெயர் அறிவிப்பு

ரீஎன்ட்ரியாகும் மோகன்- படத்தின் பெயர் அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2022 4:47 PM GMT (Updated: 2 Jan 2022 4:47 PM GMT)

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் ரீ என்ட்ரியாக மோகன் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருபவர் மோகன். 1977-ம் ஆண்டு கமல் நடித்துள்ள கோகிலா படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக உயர்ந்தார். 1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் ரீ என்ட்ரியாக மோகன் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்று அனைவராலும் பாராட்டு பெற்ற நடிகர் மோகன் நடிக்க உள்ள படத்தின் பெயர் ‘ஹரா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

மோகனை பல்வேறு கதாபாத்திரங்களில் பார்த்து ரசித்து மக்கள் கொண்டாடியது போல, 'ஹரா' படத்திலும் அவரது கதாபாத்திரம் மிகவும் பரவலாகப் பேசப்படும் என கூறப்படுகிறது.

‘ஹரா’ திரைப்படத்தை கோவை எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் குறித்த மேலும் பல சுவாரசிய தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும்.

Next Story