நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்


நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட்
x
தினத்தந்தி 30 Jan 2022 5:54 PM GMT (Updated: 30 Jan 2022 5:54 PM GMT)

சின்னத்திரையில் அறியப்பட்டு சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை வாணி போஜன் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை வாணி போஜன் மற்றும் 'மெஹந்தி சர்க்கஸ்', 'பெண்குயின்' ஆகிய திரைப்படங்களில் நடித்த மதம்பட்டி ரங்கராஜ் இருவரும் இணைந்து தற்போது ஒரு திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கு 'கேசினோ' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் மார்க் ஜோயல் இயக்குகிறார். கேசினோ படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது வாணிபோஜன் படத்தில் தன்னுடைய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

கேசினோ திரைப்படத்திற்கு ஸ்டான்லி சேவியர் இசையமைத்து விக்னேஷ் ஜே.கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Next Story