விராட் கோலி இனி ஆபத்தானவராக மாறுவார் - கவுதம் கம்பீர் கருத்து


விராட் கோலி இனி ஆபத்தானவராக மாறுவார் - கவுதம் கம்பீர் கருத்து
x
தினத்தந்தி 14 Dec 2021 12:17 PM GMT (Updated: 14 Dec 2021 12:17 PM GMT)

ஒரு நாள் போட்டிகளில் இனி கோலி எதிரணியினருக்கு மிகவும் ஆபத்தானவராக மாறக்கூடும் என கம்பீர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட்  கேப்டனாக இருந்த விராட் கோலி  சமீபத்தில் நீக்கப்பட்டு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் விராட் கோலியின் வருங்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளதாவது :

கேப்டன் பொறுப்பில் கோலி இல்லாதது அவரது அழுத்தத்தை பெரும் அளவில் குறைக்கும். கேப்டன் பதவியின் அழுத்தம் அவரது தோள்களில் இல்லாததால் ஒரு நாள் போட்டிகளில் இனி அவர் எதிரணியினருக்கு மிகவும் ஆபத்தானவராக மாறக்கூடும்.

இனி வரும் காலங்களில் அவர் இந்தியாவை பெருமைப்படுத்தப் போகிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இனி  அவர் விளையாடும் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் எடுக்கப் போகிறார். அதே நேரத்தில், இரண்டு வெவ்வேறு வீரர்கள் (ரோஹித் சர்மா ) அநேகமாக தங்கள் சொந்த எண்ணங்கள் மற்றும்  பார்வையைக் கொண்டு இந்திய அணியை வழிநடத்துவார்கள்.

அதே சமயம், இவ்வளவு நீண்ட காலமாக அணியின் கேப்டனாக அவர் காட்டிய அதே ஆர்வத்தை அவர் கேப்டனாக இல்லாவிட்டாலும் நிச்சயம் காட்டுவர். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story