ஐபிஎல் மெகா ஏலம் எப்போது?


ஐபிஎல் மெகா ஏலம் எப்போது?
x
தினத்தந்தி 22 Dec 2021 2:12 PM GMT (Updated: 22 Dec 2021 2:12 PM GMT)

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது.

மும்பை,

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வைத்து இந்த ஏலம் நடைபெற உள்ளது என்று பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மெகா ஏலம் இரண்டு நாட்களாக  நடைபெற உள்ளது. 

இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், கொரோனா பரவல் அதிகரிக்காமல் இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வைத்து ஏலம் நடைபெறும், இல்லையென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முறை ஏலத்தில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட புதிய அணிகளான லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டு தங்கள் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்ய உள்ளன. 

Next Story