இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம்
x
தினத்தந்தி 28 Dec 2021 1:47 PM GMT (Updated: 28 Dec 2021 1:47 PM GMT)

தேநீர் இடைவேளை வரை தென் ஆப்பிரிக்க அணி 38 ஓவர்களில் 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

செஞ்சூரியன்,

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் 105.3 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி தரப்பில் கே.எல் ராகுல் அதிகபட்சமாக 123 ரன்கள் எடுத்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ்சை தொடங்கியது. ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே கேப்டன் டீன் என்கர் பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மார்க்ரம் (13ரன்கள்), கீகன் பீட்டர்சன் (15 ரன்கள்), வான் டர் டுசன் (3 ரன்கள்) அடுத்தடுத்து வெளியேறினர். சிறிதுநேரம் போராடிய குயிண்டன் டி காக் 34 ரன்னில் வெளியேறினார். 

மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை தென் ஆப்பிரிக்க அணி 38 ஓவர்களில் 109 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தெம்பா பவுமா 31 ரன்களுடனும், வியான் மல்டர் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story