நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் :2-வது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் :2-வது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்
x
தினத்தந்தி 18 Feb 2022 11:49 AM GMT (Updated: 18 Feb 2022 11:49 AM GMT)

2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 34 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது


நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.முக்கியமாக நியூசிலாந்து வேக பந்து வீச்சாளர் மேட் ஹென்ரியின் பந்துவீச்சில் ரன்கள் எடுக்க தடுமாறிய அந்த அணி அடுத்தடுத்தது விக்கெட்டுகள் இழந்தது .

இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில்  49.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய மேட் ஹென்ரி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை தொடர்ந்து  முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அதிரடியாக ரன்களை குவித்தது. இறுதியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 117.5 ஓவரில் 482 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது

தென் ஆப்பிரிக்கா அணியில்  அதிகபட்சமாக ஆலிவர் 3 விக்கெட் வீழ்த்தினார். 

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2ம் நாள் ஆட்ட நேர முடிவில்  34 ரன்களுக்குள் 3 விக்கெட் இழந்துள்ளது. 

Next Story