டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு..!


டி20 தொடரை கைப்பற்றுமா..? டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு..!
x
தினத்தந்தி 26 Feb 2022 1:16 PM GMT (Updated: 26 Feb 2022 1:16 PM GMT)

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இமாச்சலபிரதேசம் தரம்சாலாவில் இன்று நடக்கிறது.

தரம்சாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடக்கிறது.

இந்த தொடரை வெல்வது மட்டுமின்றி சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள அந்த வீறுநடையை தொடருவதிலும் இந்திய அணி தீவிர முனைப்புடன் உள்ளது.

குளிர்ச்சியான பகுதியான தரம்சாலாவில் வேகப்பந்து வீச்சு ஓரளவு எடுபடலாம். ஆட்டத்தின் போது மழை குறுக்கிடவும் அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளது. 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த அந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று இருந்தது நினைவு கூரத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் அய்யர், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: பதும் நிசாங்கா, கமில் மிஷாரா, சாரித் அசலங்கா, குணதிலகா, தினேஷ் சன்டிமால், தசுன் ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லாஹிரு குமாரா, பினுரா

இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Next Story