கடைசி டி20 போட்டி: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!


கடைசி டி20 போட்டி: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு..!
x
தினத்தந்தி 27 Feb 2022 1:13 PM GMT (Updated: 27 Feb 2022 1:13 PM GMT)

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது.

தரம்சாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற 2-வது போட்டியில்  7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. 2-வது ஆட்டத்தில் விளையாடிய மறுநாளே ஓய்வின்றி களம் இறங்க வேண்டி இருப்பதாலும், தொடரை ஏற்கனவே வென்று விட்டதாலும் இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றியை சுவைத்துள்ள இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடினால், தொடந்து அதிக வெற்றிகளை குவித்த அணிகளான ஆப்கானிஸ்தான், ருமேனியா ஆகிய நாடுகளின் சாதனையை (தொடர்ச்சியாக தலா 12 வெற்றி) இந்தியா சமன் செய்யும்.

இந்த நிலையில் 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 7 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இலங்கை அணி பேட்டிங் செய்ய இருக்கிறது.

Next Story