தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹம்சா சஸ்பெண்டு; ஐ.சி.சி. நடவடிக்கை


தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹம்சா சஸ்பெண்டு; ஐ.சி.சி. நடவடிக்கை
x
தினத்தந்தி 26 March 2022 9:41 AM GMT (Updated: 26 March 2022 9:41 AM GMT)

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜுபைர் ஹம்சாவை ஐ.சி.சி. அமைப்பு ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்டு செய்து உள்ளது.



ஜோகன்னஸ்பர்க்,



தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஜுபைர் ஹம்சா.  கடந்த ஜனவரி 17ந்தேதி நடந்த போட்டியின்போது, ஹம்சாவிடம் இருந்து சேகரித்த மாதிரிகளில் இருந்து, அவர் தடை செய்யப்பட்ட பியூரோசமைடு என்ற வேதிபொருளை பயன்படுத்தி இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்த பியூரோசமைடு என்ற வேதிபொருளானது, உலக ஊக்க மருந்து சோதனை கழகத்தின் தடை செய்யப்பட்ட பட்டியலில், எஸ்.5 பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்ட வேதிபொருள் ஆகும்.  இதனை தொடர்ந்து ஹம்சாவை, ஒழுங்கு நடவடிக்கையாக தற்காலிக சஸ்பெண்டு செய்வது என ஐ.சி.சி. அமைப்பு முடிவு செய்தது.

ஐ.சி.சி.யின் ஊக்க மருந்து சோதனை விதிகளை மீறியதற்காக ஹம்சாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இந்த முடிவு நடைமுறைக்கு வராமல் இருந்து வந்தது.  இந்நிலையில், இந்த தற்காலிக சஸ்பெண்டு முடிவை ஹம்சா ஏற்று கொண்டுள்ளார்.  இந்த சஸ்பெண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், ஐ.சி.சி. வேறு எதனையும் தெரிவிக்க போவதில்லை என்று ஐ.சி.சி. வெளியிட்ட அறிவிப்பு தெரிவிக்கின்றது.


Next Story