பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அபார பேட்டிங்


பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியா அபார பேட்டிங்
x
தினத்தந்தி 3 April 2022 2:48 AM GMT (Updated: 3 April 2022 2:48 AM GMT)

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர்.

கிறிஸ்ட்சர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க வீராங்கணைகளாக அலிக்சா ஹீலியும், ராகேல் ஹெய்னசும் களமிறங்கினர். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் அரைசதத்தை கடந்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி 28 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.


Next Story