குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 3 May 2017 10:30 PM GMT (Updated: 3 May 2017 8:09 PM GMT)

காங்கேயம் அருகே,குடிநீர் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

காங்கேயம்,

காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பொத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வடக்கு புதுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் சுமார் 150–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள ஆழ்குழாய் மற்றும் குடிநீர் தொட்டிகள் மூலம் குடிநீர் பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் வருவதில்லை. மேல்நிலை தொட்டிக்கு முறையாக குடிநீர் ஏற்றப்படுவதில்லை.

 இதனால் நீண்ட தூரம் சென்று குடிநீர் எடுத்து வருவதாகவும், அதுவும் சரிவர கிடைப்பதில்லை என்றும் அப்பகுதி கிராம மக்கள், 50–க்கும் மேற்பட்டோர் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story