விபத்தில் ஊனமடைந்த சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு


விபத்தில் ஊனமடைந்த சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 3 May 2017 9:54 PM GMT (Updated: 3 May 2017 9:54 PM GMT)

தானே மாவட்டம், பிவண்டியில் உள்ள கம்பாலே பகுதியை சேர்ந்தவர் பாட்டீல். இவரது மகள் தர்ஷிகா (வயது 4). இவள் 2008–ம் ஆண்டு மார்ச் 23–ந் தேதி வீட்டருகே உள்ள மருந்து கடைக்கு சென்றார்.

தானே,

தானே மாவட்டம், பிவண்டியில் உள்ள கம்பாலே பகுதியை சேர்ந்தவர் பாட்டீல். இவரது மகள் தர்ஷிகா (வயது 4). இவள் 2008–ம் ஆண்டு மார்ச் 23–ந் தேதி வீட்டருகே உள்ள மருந்து கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி சிறுமி மீது மோதியது. பின்னர் கீழே விழுந்த அவளின் கால்களின் மீதும் ஏறி இறங்கியது. இதனால் படுகாயமடைந்த சிறுமி ஊனமானாள். இதையடுத்து இழப்பீடு கேட்டு சிறுமியின் தந்தை தானே மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடாக வழங்க லாரி உரிமையாளர் சத்விந்தர்சிங் மற்றும் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.


Next Story