மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்


மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2017 10:45 PM GMT (Updated: 22 Aug 2017 9:58 PM GMT)

மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தஞ்சையில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயிலடியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தமயந்தி திருஞானம் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெற வேண்டும். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு விதிகளை திரும்ப பெற வேண்டும். அனைவருக்கும் பொதுவினியோகத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபான உற்பத்தி ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் கண்ணகி, தனசீலி, மாவட்ட துணைச் செயலாளர்கள் தாமரைச்செல்வி, எஸ்தர்லீமா, மாவட்ட பொருளாளர் ஸ்ரீதேவி, மாநகர நிர்வாகிகள் பானுமதி, பத்மாவதி, பிச்சையம்மாள், ஒன்றிய நிர்வாகிகள் மணிமொழி, முருகாம்பாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story