புயல் எச்சரிக்கை வதந்தியை நம்பாதீர்கள் மாநகராட்சி அறிவுறுத்தல்


புயல் எச்சரிக்கை வதந்தியை நம்பாதீர்கள் மாநகராட்சி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 Sep 2017 11:30 PM GMT (Updated: 2017-09-21T03:26:01+05:30)

மும்பையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மும்பை,

மும்பையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பஸ் மற்றும் ரெயில், விமான சேவை பாதிக்கப்பட்டது. இந்தநிலையில், மும்பை நகரை புயல் தாக்கப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதனால், பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இந்த தகவலை மாநகராட்சி திட்டவட்டமாக மறுத்ததுடன், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாகவும், இதனை மும்பை நகர மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


Next Story