போலி ஆவணம் மூலம் மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் டிரைவர் கைது


போலி ஆவணம் மூலம் மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2017 10:15 PM GMT (Updated: 15 Oct 2017 9:55 PM GMT)

ஆரல்வாய்மொழியில் போலி ஆவணம் மூலம் மணல் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் டிரைவர் கைது

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நேற்று காலையில் சப்–இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். தொடர்ந்து, லாரி டிரைவரிடம் விசாரித்த போது, மணல் ஏற்றி வருவதற்கான ஆவணங்கள் இருப்பதாக கூறினார். அந்த ஆவணங்களை போலீசார் வாங்கி சோதனையிட்ட போது, அது போலியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மலையாண்டி (வயது45) என்பவரை கைது செய்தனர்.   

இதுபோல், நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆவணங்கள் இன்றி மணல் கடத்தி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story