பங்குனி வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பங்குனி வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 29 Nov 2017 8:34 PM GMT)

பங்குனி வாய்க்காலை சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி,

திருச்சி அருகே உள்ள பனமங்கலம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், பங்குனி வாய்க்காலை சீரமைக்க வேண்டும், பங்குனி வாய்க்கால் தூர்வாரப்படாததால் கரையில் உடைப்பு ஏற்பட்டு மழைநீருடன் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் ஊருக்குள் படையெடுத்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும், இதுபற்றி புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெயின்ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கலை தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் நல்ல சேகர், வட்டார தலைவர் அரவிந்த் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Next Story