கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்ககோரி நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம்


கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்ககோரி நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முன்பு முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 29 Dec 2017 10:45 PM GMT (Updated: 29 Dec 2017 7:58 PM GMT)

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கக்கோரி நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை முன்பு பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற 4–ந்தேதி முற்றுகை போராட்டம் நடக்கிறது.

கடலூர்,

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க கோரி நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கடலூர் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் வருகிற 4–ந்தேதி பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் முற்றுகை போராட்டம் நடக்கிறது. இது தொடர்பாக தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ராஜாராம் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் சிவமுருகன், வளர்மதி, லெனின் ஜெய்சங்கர், பி.ஜே.எக்ஸ்.வேதநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து சிறப்புரையாற்றினார்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சிவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், சுரேஷ்பாபு, விவசாய பிரிவு செயலாளர் ராஜவேலு, ஒன்றிய செயலாளர்கள் கே.பி.ஆர்.சரவணன், வேல்முருகன், சித்தநாதன், அய்யனார், தென்னரசு, முத்துகுமரன், பார்த்தசாரதி, முத்துகிருஷ்ணன், நகர செயலாளர்கள் நெல்லிக்குப்பம் கஜேந்திரன், பண்ருட்டி பாக்கியராஜ் மற்றும் பேரூர்கழக செயலாளர்கள் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் நகர செயலாளர் வி.சி.சரவணன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் வருகிற 4–ந்தேதி நெல்லிக்குப்பத்தில் நடைபெற உள்ள முற்றுகை போராட்டத்துக்கு வருகை தரும் பிரேமலதா விஜயகாந்துக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என்றும், ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story