பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது


பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2017 10:15 PM GMT (Updated: 30 Dec 2017 8:52 PM GMT)

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

வாரியங்காவல்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூசையப்பர் பட்டினம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் லூர்துசாமி (வயது 49). இந்நிலையில் லூர்து சாமி மனநலம் பாதிக்கப்பட்ட 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமாரி வழக்குப்பதிந்து லூர்துசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story