மாவட்ட செய்திகள்

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது + "||" + Murder threat to policemen involved in the process of regulating traffic - 3 people arrested

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - 3 பேர் கைது
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,

தஞ்சை காந்திசாலை இர்வீன்பாலம் அருகே போக்குவரத்து பிரிவு போலீஸ்காரர் ராஜா நேற்றுமுன்தினம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர், அந்த வழியாக விதிமுறைகளை மீறி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை வழிமறித்து, மோட்டார் சைக்கிளின் சாவியை எடுத்தார்.


அப்போது 3 பேரும் போலீஸ்காரர் ராஜாவின் கையை பிடித்து தகராறு செய்தனர். இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க ராஜா தனது செல்போனை எடுத்தபோது அதை 3 பேரும் பிடுங்கி கீழே போட்டு உடைத்தனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், 3 பேரையும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாட்சி புரத்தை சேர்ந்த காசிநாதன் மகன் சதீஷ்(வயது23), தஞ்சை மானம்புச்சாவடி மிஷின் தெருவை சேர்ந்த டேனியல் மகன் சபேஸ்(24), ஞானம்நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரமணி(24) ஆகியோர் என்பதும், இவர்கள் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், செல்போனை உடைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சி.சி.டி.வி. கேமரா காட்சி வெளியானது வயர்லெசில் பேசிய போலீஸ்காரர் விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் “மோட்டார் சைக்கிளில் சென்றவரை மடக்கி வாயில் மதுவை ஊற்றினர்”
வயர்லெசில் பேசிய போலீஸ்காரர் விவகாரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை மடக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
2. தஞ்சை: வழிப்பறிக்கு திட்டமிட்ட 5 பேர் கைது
தஞ்சையில் வழிப்பறிக்கு திட்டமிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, கொலை, திருட்டு வழக்குகளில் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
3. தஞ்சை பெரிய கோவில்: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
தஞ்சை பெரிய கோவிலில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான 3 சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. பழைய குற்றவாளிகளின் கைவரிசையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்து சர்வே நடத்த மத்திய அரசு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு
பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யும் வகையில், முதற்கட்டமாக சர்வே நடத்த மத்திய அரசு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
5. இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.