சீர்காழி அருகே கொடிக்கம்பம் சேதம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
சீர்காழி அருகே கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழி அருகே சட்டநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் 10-க்கும் மேற்பட்ட கொடிக்கம்பங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை சேதப்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கட்சியின் மாவட்ட செய்தி தொடர்பாளர் தேவா தலைமையில் நிர்வாகிகள் ஆடலரசு, ஜீவா, தீபன்ராஜ், ராமமூர்த்தி உள்பட கட்சியினர் ஏராளமானோர் சம்பவ இடத்திற்கு சென்று சேதமடைந்த கொடிக்கம்பத்தை பார்வையிட்டனர்.
பின்னர் கட்சியினர், கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்து சட்டநாதபுரம் மெயின்ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3-வது முறையாக சட்டநாதபுரத்தில் உள்ள கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதை கண்டித்தும், சேதப்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி கொக்கம்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சிதம்பரம்-மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story