போலீஸ் அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம் ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்


போலீஸ் அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம் ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Oct 2018 10:00 PM GMT (Updated: 12 Oct 2018 8:00 PM GMT)

ராஜபாளையம் அருகே போலீஸ் அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றத்தை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்,

ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கீழத்தெருவில் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சேத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், புறநகர் சப்–இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் செய்திருந்தனர். திருவிழா முடிந்ததும் கிராம மக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகள் இருவருக்கும் சால்வை அணிவித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மற்றொரு தரப்பினர் மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது.

 இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் நிர்வாகம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரையும் சப்–இன்ஸ்பெக்டர் ராமசாமியையும் ஆயுதப்படை போலீசுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாறுதல் உத்தரவை ரத்துசெய்ய வலியுறுத்தியும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள ஆதிதிராவிட நலத்துறை உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளியில் படிக்கும் 300–மாணவ–மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story