சப்பாணிக்காடு-கொண்டதேவன்காடு சாலையை சீரமைக்க வேண்டும்: மாணவ-மாணவிகள் கோரிக்கை

சப்பாணிக்காடு-கொண்டதேவன்காடு சாலையை சீரமைக்க வேண்டும்: மாணவ-மாணவிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Nov 2018 4:15 AM IST (Updated: 10 Nov 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமாக உள்ள சப்பாணிக்காடு-கொண்டதேவன்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு,

குண்டும், குழியுமாக உள்ள சப்பாணிக்காடு-கொண்டதேவன்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் சப்பாணிக்காடு-கொண்டதேவன்காடு இணைப்பு சாலை உள்ளது. இந்த பகுதியில் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த சாலை கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே குண்டும், குழியுமாக உள்ள சப்பாணிக்காடு- கொண்டதேவன்காடு சாலையை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story