கரும்பு விவசாயிகள்-சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தில் அரசு தலையிடாது - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்


கரும்பு விவசாயிகள்-சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தில் அரசு தலையிடாது - மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தகவல்
x
தினத்தந்தி 12 Dec 2018 10:41 PM GMT (Updated: 12 Dec 2018 10:41 PM GMT)

கரும்பு விவசாயிகள்-சர்க்கரை ஆலைகள் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் மாநில அரசு தலையிடாது என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

பெங்களூரு,

தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி அந்த சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாநில அரசு தலையிடாது.

நிலுைவத்தொகை குறித்து சர்க்கரை ஆலை உரிமையாளர்களை அழைத்து முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்கும்படி குமாரசாமி உத்தரவிட்டார்.

விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது, சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. கரும்புக்கு நியாயமான விலையை பெற்றுத்தருவது மாநில அரசின் கடமை. விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகள் விரைவாக வழங்க வேண்டும். இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.



Next Story