சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 March 2019 11:00 PM GMT (Updated: 19 March 2019 7:54 PM GMT)

மங்களமேடு அருகே உள்ள சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மங்களமேடு,

மங்களமேட்டை அடுத்த எறையூரில் உள்ள நேரு சர்க்கரை ஆலையில் எந்திர கோளாறுகள் காரணமாக 3 நாட்களுக்கு ஒருமுறை கரும்பு அரவை நடைபெறுகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கரும்புகளை வெட்டி டிராக்டரில் ஏற்றி வரும் விவசாயிகள், கரும்புகளை வெயிலில் நிறுத்தி வைப்பதால் அதில் எடை குறைவு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் 3 நாட்கள் ஆலையில் காத்திருக்க வேண்டி உள்ளதாக கூறி நேற்று ஆலையில் விவசாயிககள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் ஆலையை தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சர்க்கரை ஆலை நிர்வாக அலுவலர் ஜெய்னூலபுதின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் இனிவரும் காலங்களில் ஆலை தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். 

Next Story