சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு


சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு
x
தினத்தந்தி 20 March 2019 4:00 AM IST (Updated: 20 March 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் தங்கள் வேட்பு மனுவை சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான ஜெயகாந்தனிடம் கொடுக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட நேற்று முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.

முதல் நாளான நேற்று யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள் 3 கார்களில் மட்டுமே வரவேண்டும், மனுத்தாக்கல் செய்யும் அரசியல் கட்சியினருடன் 4 பேர் மட்டும் வரவேண்டும் என்று தேர்தல் விதிமுறைகள் உள்ளன.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. அலுவலகத்திற்குள் செல்பவர்கள் மெட்டல் டிடெக்டர் சோதனை செய்த பின்னர் தான் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல ஒருவழி மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. மற்ற வழிகளை போலீசார் தடுப்பு கம்பிகளை கொண்டு அடைத்துவிட்டனர். இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

இதையடுத்து அந்த வழிகளில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடியும் வரை இருசக்கரவாகனங்களில் செல்பவர்களை மட்டும் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story