மாவட்ட செய்திகள்

விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை + "||" + Old man dead in lake near Villupuram - Murder? Police investigation

விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை

விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணம் - கொலையா? போலீஸ் விசாரணை
விழுப்புரம் அருகே ஏரியில் அழுகிய நிலையில் முதியவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு காலனி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 65). இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆடு மேய்க்க சென்றவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ரங்கசாமியை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவரை பற்றிய எந்தவொரு தகவலும் இல்லை.


இந்நிலையில் நேற்று மாலை விழுப்புரம் அருகே உள்ள விராட்டிக்குப்பம் ஏரியில் ரங்கசாமி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எப்படி இறந்தார்?, யாரேனும் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு உடலை ஏரியில் வீசிவிட்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. வேலூர் அருகே, கோட்டை அகழி கழிவுகளை ஏரியில் கொட்டிய லாரிகள் சிறைபிடிப்பு
வேலூரை அடுத்த சித்தேரி ஏரியில் கோட்டை அகழி கழிவுகளை கொட்டிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
2. திருக்கனூர், பாகூர் பகுதியில் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக பெய்து வரும் தொடர் மழையால், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து அவை நிரம்பி வருகின்றன. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியை தூர்வாரும் பணி 10 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தொடங்கினர்
கள்ளப்பெரம்பூரில் உள்ள செங்கழுநீர் ஏரியை தூர்வாரும் பணியை 10 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தொடங்கி உள்ளனர்.
4. காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி
காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாயினர்.
5. நாட்டார்மங்கலம் ஏரியை தூர்வாரும் பணியில் இறங்கிய இளைஞர்கள்
நாட்டார்மங்கலத்தில் உள்ள ஏரியில் இளைஞர்கள் தூர்வாரும் பணியில் இறங்கியுள்ளனர்.