மாவட்ட செய்திகள்

முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை + "||" + Kamal Haasan's petition anticipatory bail the court Today's trial in Madurai HC

முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

முன்ஜாமீன் கோரி கமல்ஹாசன் மனு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
முன் ஜாமீன் கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு, மதுரை ஐகோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
மதுரை,

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் பேசியதாக அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வக்கீல் விஜயன் நேற்று மதுரை ஐகோர்ட்டில், நீதிபதி புகழேந்தி முன்பு கோரிக்கை விடுத்தார்.


அதற்கு நீதிபதி, போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு தடை விதிப்பது தொடர்பான மனுக்களை விடுமுறை கால கோர்ட்டில் விசாரிக்க முடியாது. தேவைப்பட்டால் மனுதாரர் அந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் கேட்டு அவர் தரப்பு வக்கீல்கள் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிக்பாக்கெட் திருடன் அடித்துக்கொலை பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறா? கூட்டாளியிடம் விசாரணை
நாகர்கோவிலில் பிக்பாக்கெட் திருடன் அடித்துக் கொலை செய்யப்பட்டான். பணத்தை பங்கு பிரிப்பதில் இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து கூட்டாளி ஒருவரிடம் விசாரணை நடத்தினர்.
2. உப்பிடமங்கலம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி போலீசார் விசாரணை
உப்பிடமங்கலம் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
3. அரசு பஸ்- லாரி நேருக்கு நேர் மோதல்: டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயம் போலீசார் விசாரணை
சுவாமிமலை அருகே அரசு பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
4. படிக்காமல் டி.வி. பார்த்த சிறுமி அடித்துக்கொலை தாயிடம் போலீசார் விசாரணை
தொட்டியம் அருகே படிக்காமல் டி.வி. பார்த்ததாக சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவளுடைய தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. மேலநாகூர் தர்காவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை
மேலநாகூர் தர்காவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.