தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி வெட்டிக்கொலை கட்டிட மேஸ்திரி போலீசில் சரண்


தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவி வெட்டிக்கொலை கட்டிட மேஸ்திரி போலீசில் சரண்
x
தினத்தந்தி 20 May 2019 4:45 AM IST (Updated: 20 May 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

தம்பியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கட்டிட மேஸ்திரி, போலீசில் சரண் அடைந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்வெப்பாலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 31). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கஸ்தூரி (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு அரசு (8), தமிழ் (5) என்ற 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தராஜிக்கு, கஸ்தூரி அக்காள் மகள் ஆவார்.

கஸ்தூரிக்கும், கோவிந்தராஜின் தம்பி சின்னசாமி (29) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த கோவிந்தராஜ் அவர்களை கண்டித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஸ்தூரியும், சின்னசாமியும் உல்லாசமாக இருந்ததை கோவிந்தராஜ் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், நேற்று அதிகாலை வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கி கொண்டிருந்த மனைவி கஸ்தூரியை அரிவாளால் சரமாரியாக கழுத்தில் வெட்டிக்கொலை செய்தார். இதன்பிறகு கோவிந்தராஜ் நேராக பர்கூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று தான் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார்.

இதையடுத்து பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கஸ்தூரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்து விசாரித்தனர். கோவிந்தராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மனைவிக்கும், தம்பிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. அதை நான் கண்டித்தும் அவர்கள் கைவிட மறுத்ததால் ஆத்திரத்தில் மனைவியை வெட்டிக் கொன்றதாக கூறியுள்ளார்.

Next Story