நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி
நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் அமைதி பேரணி நடத்தினர்.
நெல்லை,
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அமைதி பேரணி நடந்தது. நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குமரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாலையில் பாளையங்கோட்டையில் அமைதி பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தின் அருகில் தொடங்கி தெற்கு பஜார் வழியாக வந்து லூர்துநாதன் சிலை முன்பு முடிவடைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story