வெவ்வேறு சம்பவங்களில் ரெயில் மோதி 2 பேர் சாவு யார் அவர்கள்? போலீசார் விசாரணை


வெவ்வேறு சம்பவங்களில் ரெயில் மோதி 2 பேர் சாவு யார் அவர்கள்? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jun 2019 10:15 PM GMT (Updated: 2 Jun 2019 3:23 PM GMT)

இரணியல் மற்றும் குழித்துறையில் ரெயில் மோதி வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். அவர்களின் பெயர், ஊர் விவரங்கள் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்,

இரணியல் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இரணியல் ரெயில் நிலைய அதிகாரி களுக்கும், நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் சென்ற பரசுராம் எக்ஸ்பிரஸ் மோதி இறந்தது தெரியவந்தது. ஆனால், இறந்தவரின் பெயர், ஊர் விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் குழித்துறை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயிலில் அடிப்பட்டு இறந்தது தெரியவந்தது.

அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்து ரெயில்வே போலீசார் வழக் குப்பதிவு செய்து இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story