மாவட்ட செய்திகள்

வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு, விவசாயிகள் வலியுறுத்தல் + "||" + In vaikai river Prevent sand stains Monitoring and farmers' inspection at 4 locations

வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு, விவசாயிகள் வலியுறுத்தல்

வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு, விவசாயிகள் வலியுறுத்தல்
வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நிலக்கோட்டை,

நிலக்கோட்டை அணைப்பட்டி ஒட்டியுள்ள வைகையாற்று பகுதியில் இரவு, பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. வைகையாற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். மேலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயமும் உள்ளது.

எனவே வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வருவாய்த்துறையினரும், போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நிலக்கோட்டை மண்டல துணை தாசில்தார் ருக்மணி, வத்தலக்குண்டு மண்டல துணை தாசில்தார் மணிமேகலை, நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், நிலக்கோட்டை தாலுகாவில் கடந்த பல ஆண்டுகளாக வைகையாற்றில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணல் அள்ளுவதை தடுக்க அணைப்பட்டி, விளாம்பட்டி, விருவீடு, வத்தலக்குண்டு ஆகிய 4 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்க வேண்டும். வைகையாற்று படுகையை ஒட்டியுள்ள முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து தாசில்தார் நவநீதகிருஷ்ணன் பேசுகையில், வைகையாற்றில் கடந்த ஆண்டுகளை விட தற்போது மணல் அள்ளுவது வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மர்மநபர்கள் இரவு நேரங்களில் மணல் அள்ளி வருகின்றனர். இதை தடுக்க கிராம பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் மணல் அள்ளுவதை தடுக்க முடியும் என்றார்.

இதைத்தொடர்ந்து வைகையாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க விவசாயிகள், தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. மண்டல துணை தாசில்தார் டேனியல், வருவாய் ஆய்வாளர்கள் சரவணமுத்து, ராமசாமி மற்றும் விவசாய சங்கத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட்டம்; போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
சேவூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் விவசாயியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்கள். சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
2. அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்
அடுத்த ஆண்டு தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசிக்க வேண்டும் என கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.
3. சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி - 3 பேர் கைது
சேலத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி விவசாயியிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேரை கொல்ல முயற்சி 3 பேருக்கு வலைவீச்சு
காவேரிப்பட்டணம் அருகே நிலத்தகராறில் விவசாயி உள்பட 3 பேரை கொலை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திடீர் பரபரப்பு: சிவகங்கை கலெக்டர் முன்பு மோதல்: நாற்காலிகள் வீச்சு - ஒருவர் கைது
சிவகங்கை கலெக்டர் பங்கேற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 விவசாயிகள் மோதிக்கொண்டதுடன் நாற்காலிகள் வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.