சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலை, நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்- தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்


சென்னை-நெல்லை இடையே இயக்கப்படும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலை, நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும்- தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Aug 2019 10:45 PM GMT (Updated: 5 Aug 2019 8:44 PM GMT)

சென்னை- நெல்லை இடையே இயக்கப்படும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும் என்று தளவாய்சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.

நாகர்கோவில்,

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் நேற்று தெற்கு ரெயில்வே தலைமை இயக்க மேலாளர் அனந்தராமனிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், “வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு சுவிதா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை நெல்லைக்கு வருகிறது. இந்த ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிக்க வேண்டும். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும் காந்தி தாம்ரேக் ரெயிலை தொடர்ந்து இயக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தலைமை இயக்க மேலாளர் அனந்தராமன் தெரிவித்தார்.

மேலும் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் இயக்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆலோசனையின் போது தென் மாவட்ட ரெயில் பயணிகள் சங்க பொதுச்செயலாளர் சூசைராஜ் உடனிருந்தார்.

Next Story