வாழப்பாடி அருகே, நாட்டுத்துப்பாக்கியுடன் திரிந்த வாலிபர் கைது


வாழப்பாடி அருகே, நாட்டுத்துப்பாக்கியுடன் திரிந்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 2019-08-12T01:54:26+05:30)

வாழப்பாடி அருகே நாட்டுத்துப்பாக்கியுடன் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாழப்பாடி,

வாழப்பாடி வனச்சரகம் சேசன்சாவடி பிரிவு வனவர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று குமாரபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை நிறுத்தினர். அவரை சோதனை செய்தபோது உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை வனத்துறையினர் வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் ஈஸ்வரமூர்த்திபாளையத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 30) என்பதும், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குறவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கியை வாங்கி பழந்தின்னி வவ்வால்களை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வனவர் சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்திருந்த மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story