வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை


வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம்: ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 Aug 2019 10:15 PM GMT (Updated: 13 Aug 2019 6:53 PM GMT)

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் நீடாமங்கலத்தில் ரெயில் என்ஜினில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீடாமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 27). இவர் திருவாரூர் பகுதியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த தொழிலில் நஷ்டமடைந்ததால் நாகேந்திரன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நீடாமங்கலம்- தஞ்சாவூர் ரெயில் வழித்தடத்தில் திருச்சியில் இருந்து காரைக்காலை நோக்கி சென்ற ரெயில் என்ஜினில் நாகேந்திரன் பாய்ந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சாவூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து நாகேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story