மாவட்ட செய்திகள்

தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை + "||" + DMK Police investigate suicide of former councilor's daughter

தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சியில் தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி,

திருச்சி மாநகராட்சி 26-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் லீலாவேலு. இவர் தி.மு.க. மகளிர் அணி நிர்வாகியாகவும் உள்ளார். இவருடைய மகள் பாண்டிச்செல்வி(வயது 35) சங்கிலியாண்டபுரம் பகுதியில் கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். பாண்டிச்செல்வியின் கணவர் ராஜா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்று விட்டார்.


இந்தநிலையில் குழந்தைகளுடன் வசித்து வந்த பாண்டிச்செல்வி நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது பற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, “பாண்டிச்செல்விக்கு, திருமணமான ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு அவர், ஆட்டோ டிரைவரின் வீட்டுக்கு சென்று அவரை தன்னுடன் குடித்தனம் நடத்த வரும்படி வாக்குவாதம் செய்துள்ளார். இது பற்றி அறிந்த அவரது சகோதரர் அங்கு சென்று பாண்டிச்செல்வியை சமாதானம் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்தே அவர் நள்ளிரவுக்கு மேல் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்“ என்றனர்.

லீலாவேலு சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு சென்றார். இது குறித்து அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்ட பாண்டிச்செல்விக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி மீது தாக்குதல் அண்ணன்-தம்பிக்கு போலீசார் வலைவீச்சு
விராலிமலை அருகே டிராக்டரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
2. காட்டு யானை தாக்கி விவசாயி பலி: வனத்துறை விடுதியை சூறையாடிய கிராம மக்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு
தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலியானதை தொடர்ந்து வனத்துறை விடுதியை கிராம மக்கள் சூறையாடினார்கள். இது தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
3. நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் சாவு போலீஸ் விசாரணை
நாகர்கோவிலில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4. திருவாரூர் அருகே பயங்கரம்: எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகை ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.