மேட்டூர் அணை, நீர்த்தேக்கத்தில் மூழ்கி மின் ஊழியர் சாவு


மேட்டூர் அணை, நீர்த்தேக்கத்தில் மூழ்கி மின் ஊழியர் சாவு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 11:03 PM GMT)

மேச்சேரி அருகே மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் மூழ்கி மின்சார வாரிய ஊழியர் பலியானார்.

மேச்சேரி,

ஓமலூர் அருகே உள்ள கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). இவர் கருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். தமிழ்ச்செல்வன் மற்றும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான குமார், தன்ராஜ், மோகன், பிரகாஷ் ஆகியோர் மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியில் உள்ள சக ஊழியர் வீட்டிற்கு நேற்று விருந்துக்கு சென்றனர்.

பின்னர் மாலையில் அவர்கள் மேச்சேரி அருகே கூனாண்டியூர் பகுதியில் உள்ள மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வன் நீரில் மூழ்கினார். இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.

பின்னர் இது குறித்து அவர்கள் மேச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துநீரில் மூழ்கி இறந்து போன தமிழ்ச்செல்வன் உடலை மீட்பு குழுவினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும் போது ஆழமான பகுதிக்கு செல்லக்கூடாது. தடை செய்யப்பட்ட பகுதியில் சென்று காவிரி ஆற்றில் குளிக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தும், மீறி சென்று குளிப்பதால் தான் இது போன்ற உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று கூறினர்.

Next Story