தென்காசி, சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி, சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சிலர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து தென்காசியில் நேற்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுமயில் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, கற்பகம், சி.பி.ஐ. வட்டார செயலாளர்கள் அயூப் கான், தங்கம், ராமகிருஷ்ணன், புளியங்குடி நகர செயலாளர் மணிகண்டன், மாவட்ட குழு உறுப்பினர் பால்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவி மேனகா, மாணவர் அமைப்பு மத்தியகுழு உறுப்பினர் சத்யா, சி.ஐ.டி.யு. தென்காசி வட்டார தலைவர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் சிவகிரி காந்தி கலையரங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமசுப்பு தலைமை தாங்கினார். மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் செயற்குழு உறுப்பினர்கள் ரவீந்திரநாத், பாரதி கந்தன், கருப்பையா, மாரியப்பன், ஆட்டோ சங்க துணை செயலாளர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story