கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண் தானம் குறித்து சுகாதார ஊழியர்கள் விழிப்புணர்வு


கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண் தானம் குறித்து சுகாதார ஊழியர்கள் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 23 Sep 2020 1:52 AM GMT (Updated: 23 Sep 2020 1:52 AM GMT)

கண்களில் கருப்புத் துணிகளை கட்டிக் கொண்டு சுகாதார துறை ஊழியர்கள் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியாங்குப்பம்,

புதுவை அரசு நலவழித்துறை தேசிய கண் பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தின் கீழ் கண்தான இருவார விழாவையொட்டி அரியாங்குப்பம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தாரணி தலைமை தாங்கினார். மருத்துவ அதிகாரி நிஷாந்த், பெண் சுகாதார மேற்பார்வையாளர் மரியகுட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார ஆய்வாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

கண் தானம் செய்யும் முறைகள், கருவிழி நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள், யாரெல்லாம் கண் தானம் செய்யலாம், செய்யக்கூடாது என்பது பற்றி கண் தொழில்நுட்ப அறிவியலாளர் கலையரசி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். சுகாதார உதவியாளர் ஜெகநாதன் கண் தான விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க, சுகாதார ஊழியர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விழிப்புணர்வு

தொடர்ந்து கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கண்பார்வை இல்லாதவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது போன்று நடித்துக் காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் சண்முகப்பிரியா, களப்பணியாளர் செல்வம், ஆஷா ஊழியர்கள் மணிமாலா, தீபா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் சுகாதார உதவியாளர் ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

Next Story